மழ காத்தா நீ பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Oru Oorla Rendu Raja (2014) (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
Music
D. Imman
Year
2014
Singers
Vandana Srinivasan, Haricharan
Lyrics
Yugabharathi
மழ காத்தா நீ சுத்தி அடிக்க 
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி 
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க 
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா 
நீ சொல்லுற சொல்லுல தானே 
கடுன் கத்திரி வெயில் நானே 
ரொம்ப குளிக்கிறேன் 
நீ செய்யுற அன்புல தானே 
பனி கொட்டுற பங்குனி நானே 
ரொம்ப குளிரானேன் 
நீ செய்யுற அன்புல தானே 
பனி கொட்டுற பங்குனி நானே 
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன் 

மழ காத்தா நீ சுத்தி அடிக்க 
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி 
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க 
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா 

மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க 
மறந்து போயுடுதே உன்ன நான் பாக்க 
மூச்சு காத்த உனக்குள் புகுந்து 
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து 
அள்ளி கொடுத்திட அன்பு இருக்கையில் ஒலகே புதுசாச்சு 
இன்னும் எதுக்கு நீ வம்பு வளக்குற தொடவா 
நா எனையே உனக்கே தரவா 
  
மழ காத்தா நீ சுத்தி அடிக்க 
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி 
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க 
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா 

அழக புத்தகமா பொழுதும் வாசி 
கடைசி பக்கம் வர முழுசா நேசி 
பாவி நீதான் எதயோ பேசி 
கேள்வி கேட்டா சரியா யோசி 
வந்தா வழியில செல்லும் வரையில பயணம் முடியாது 
நம்பி நடந்திட உன்ன நெழலில தொடருவேன் 
நீ இருந்தா பெருசா வருவ 

மழ காத்தா நீ சுத்தி அடிக்க 
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி 
அதிர் வெட்ட நீ என்ன வெடிக்க 
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா 

நீ சொல்லுற சொல்லுல தானே 
கடுன் கத்திரி வெயில் நானே 
ரொம்ப குளிக்கிறேன் 
நீ செய்யுற அன்புல தானே 
பனி கொட்டுற பங்குனி நானே 
பச்ச நெருப்பானேன் வெறுப்பானேன் சிவப்பானேன் 

மழ காத்தா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.