சீனி சேவு சிரிப்புக்காரி பாடல் வரிகள்

Movie Name
Vedigundu Murugesan (2009) (வெடிகுண்டு முருகேசன்)
Music
Dhina
Year
2009
Singers
Shankar Mahadevan
Lyrics
Yugabharathi

சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி
சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி

சீனி சேவு சிரிப்புக்காரி
கார சேவு மொறப்புக்காரி
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே

காப்பி கொட்ட நெறத்துக்காரா
கையு முறுக்கு வெரப்புக்காரா
தேங்காச் சில்லு கண்ணு போதுமே
வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே
சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா

மச்சம் ஒதடு இனிக்கும் போது
மச்சான் மனசில் இனிக்கும் தேனே
உன் சிரிப்புல கைதியா மாறினேனே..

சீனி சேவு சிரிப்புக்காரா
கார சேவு மொறப்புக்காரா
இஞ்சி மிட்டாய் கன்னம் போதுமே
அந்த பால்கோவா முத்தம் வேணுமே....

முத்தமே மொத்தமா மாறி போச்சு இப்போது
சித்தமே சுத்தமா ஆகி போச்சு இப்போது
உன் மீசக்குள்ள நானே ஒரு கன்னி வெடி பொதச்சேன்
நீ முறுக்கும் போது வெடிக்குமான்னு தவியாத் தவிச்சேன்

என் ஆயுசுக்கும் நானே ஒரு ஆச வெத போட்டேன்
அது வளர தானே பருவ வேலி நானும் போட்டேன்
கள்ளக் சிரிப்புக்காரா நல்ல மொரப்புக்காரா
வெக்க வேலி தாண்டி நானும்
உன்ன நானும் வெரட்ட மாட்டேன்
நீ மருந்துபோல் இருந்துக்கோ மறுக்க மாட்டேன் ஹே (சீனு)

எரியும் விறகா நினைவானதே
கனவோ அதிலே குளிரும் காயுதே
பகலும் இரவா உருமாறுதே
உடலும் உசுரும் உறைந்து போகுதே

நீ பாத்தாலே நெஞ்சு பூ பூக்கும்
கை சேர்ந்தாலே அன்பு காய் காய்க்கும்
கருவம் முள்ளும் உன்ன நெனச்சு எலவு பஞ்சாச்சு
அவரக் கொடி உன்ன அணைச்சு அருகம்புல்லாச்சு
நீ ஆசையோடு பேச காத்து சூடாச்சு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.