நீண்ட தூரம் போகும் பாதை பாடல் வரிகள்

Movie Name
Vedigundu Murugesan (2009) (வெடிகுண்டு முருகேசன்)
Music
Dhina
Year
2009
Singers
Vijay Yesudas
Lyrics
Yugabharathi

நீண்ட தூரம் போகும் பாதை ஊரைச் சேருமோ
நீல வானைச் சேர்ந்த மேகம் நீங்கிப் போகுமோ
உன்னைப் போல யாருமில்லை இந்த சீமையில்
அன்பைப் போல வேதம் ஏதுமில்லை பூமியில் (நீண்ட)

வீசும் தென்றல் காற்று பேசிப் போகும் உன் பேரை
பாறைக்குள்ளும் நீயே பாசம் வைக்கும் பேரை
இமையோ தூங்கிடும் இதயம் தூங்கிடாதே
நடைப்பாதைத் தேங்கிடும் நட்புத் தேங்கிடாதே

வாசல்மீதுக் கோலம் போல நட்பு சேருமே
காலம் மாறிப் போகக்கூடும் காட்சி வாழுமே
மனதில் கலங்கம் இல்லாமல் கருணை புரிபவன் நீயே
எதையும் திரும்பிப் பெறாமல் முழுதும் தருபவன் நீயே(நீண்ட)

ஆராரோ ஆராரிராரோ ஆராரோ ஆராரிராரோ
நாளை உன்னைச் சேர ஆசையில்லை நீங்கு
போன ஜென்மத்தோடு சேர்ந்து என்னைத் தாங்கு
கனவே கண்களாய் மாறிப் போவதேனோ
வெய்யிலே சாரலாய் தேகம் சூழ்வதேனோ

என்னில் நீயும் வாழ்வதாலே ஏதுத் தொல்லைகள்
நீயும் நானும் காதல் தாயின் இளைய பிள்ளைகள்
நெளியும் நதியலைப் போல நினைவில் சுதந்திரமாகு
உறவில் தலைமுறைக்கூட உயிரில் நிரந்தரமாகு (நீண்ட)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.