சொல் சொல் என் பாடல் வரிகள்

Movie Name
Pirivom Santhippom (2008) (பிரிவோம் சந்திப்போம் )
Music
Vidyasagar
Year
2008
Singers
Balaram
Lyrics
Yugabharathi
சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்

சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்
இந்த வேதனையை என்று நான் தொலைப்பேன்
சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்

தனிமையில் தேயும் நிலவென நானும்
கனவை பொழுதை ஏன் கலைத்தேன்
சிலுவையின் பாரம் தாலியில் தாங்கும்
உறவே உனை நான் நோகடித்தேன்
இருவரும் சேர்ந்து பாடவே பாடல் வாங்கினோம்
ஒருவரே பாடி ஓய்ந்ததால் மவுனமாய் நானும் தேங்கினேன்
ஏங்கினேன் தீயிலே தூங்கினேன்
சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்

ஆஹா ஆஹா ஆஆ…..
ஆஹா ஆஹா ஆஆ…..

மனமறியாமல் புரியும் தீங்கால்
மனமே உடையும் இதுதான் வாழ்க்கை
வெளித்தெரியாமல் நேரும் காயம்
உயிரை குடையும் கதை தான் வாழ்க்கை
கனவுகள் சூழ்ந்த காதலே தீராகாவியம்
உறவுகள் ஊமை ஆகினால் யாவுமே ஆகும் நாடகம்
மாறுமே மாறுமே சோகமே
சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்
இந்த வேதனையை என்று நான் தொலைப்பேன்
சொல் சொல் என் நெஞ்சே என்ன நான் உறைப்பேன்
உன்னில் நான் இன்றி எங்கு நான் வசிப்பேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.