கண்டும் காணாமல் பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Pirivom Santhippom (2008) (பிரிவோம் சந்திப்போம் )
Music
Vidyasagar
Year
2008
Singers
Sadhana Sargam
Lyrics
Yugabharathi
கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

நினைவுகள் போல மறதியும் வேண்டும்
நேற்றும் நீங்க நாளை வேண்டும்
தனிமைகள் தீர துணையும் வேண்டும்
தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும்
அருகிலே வந்த போதிலும் ஏனோ தூரமே
நினைவிலே தேங்கும் ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே
சேருவோம் சேருவோம் வாழவே
கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

ஆஹா ஆஹா ஆஆ…..
ஆஹா ஆஹா ஆஆ…..

உறவுகள் நீங்கி வாழும் வாழ்வில்
ஏங்கும் நொடிகள் சுமையென தெரியும்
திரைகடல் ஓடி தேடும் தேடல்
தீரும் போது தொலைந்தது தெரியும்
சிறகுகள் வாங்கும் ஆசையில் வானை நீங்கினோம்
விடைகளை தேடும் ஆவலில் கேள்வி போல் நாளும் தேங்கினோம்
மாறுதல் ஆறுதல் ஆகுமே
கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்
கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.