நெஞ்சத்திலே பாடல் வரிகள்

Movie Name
Pirivom Santhippom (2008) (பிரிவோம் சந்திப்போம் )
Music
Vidyasagar
Year
2008
Singers
Jayaram, Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
மொத்தத்திலே மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
முத்தத்திலே ஓசையில்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே
வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
மொத்தத்திலே மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே

நீ பேசியும் நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பொழுதுகள் தீரலாம் மாறாதென்றும் இனிமைகள்
இனிமைகள் முளைத்தன ஆதாம் ஏவாள் தனிமையில்
தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இள வெயில்
வெயில் சாரலடிக்கும் நிழல் கூடி அணைக்கும்
அணைக்கும் ஆசை ஆயிரம் அழைக்கும் பாஷை பா சுரம்
சுரம் ஏழிலும் சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
மொத்தத்திலே மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே

வா என்பதும் போ என்பதும் காதல் மொழியில் ஒருபொருள்
ஒரு பொருள் தருவதோ நீயும் நானும் மறை பொருள்
பொருள் வரும் புகழ் வரும் ஆனால் வாழ்வில் எது சுகம்
சுகம் தரும் சுவை தரும் காதல் போல எது வரும்
வரும் வாழ்க்கை தயங்கும் நமைப் பார்த்து மயங்கும்
மயங்கும் மாலைச் சூரியன் கிறங்கும் நாளும் ஐம்புலன்
புலன் ஐந்திலும் திசை நான்கிலும் தேடும் இன்பம் நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
ஹா… மொத்தத்திலே மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
முத்தத்திலே ஓசையில்லை சத்தமெல்லாம் வெட்கத்திலே
வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.