கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்

Movie Name
Pirivom Santhippom (2008) (பிரிவோம் சந்திப்போம் )
Music
Vidyasagar
Year
2008
Singers
Karthik, Swetha Mohan
Lyrics
Yugabharathi
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே
பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

மோதும் மோதும் கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே
போதும் போதும் இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே
பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பேசாது போனாலும் நீ என் சங்கதி
கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

காணும் காணும் இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி
ஏதோ ஏதோ ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி
நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே
தூங்காமல் கைசேர காதல் தங்குமே
ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவன் எதிரே எதிரே
பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.