அடியே என்ன ராகம் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Rummy (2014) (ரம்மி)
Music
D. Imman
Year
2014
Singers
Abhay Jodhpurkar, Poornima Satish
Lyrics
Yugabharathi
ஆ…
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா… இறைவா… இறைவா…

அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற, வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற… ஏத்துற…
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற

இதுவரை இப்படி இல்ல, கொடுக்குற ரொம்பவும் தொல்ல
எதுக்கு நீ பிறந்த தெரியல, எதுக்கு நீ வளந்த புரியல
பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லனா கட்டிடுவேன் காவி
இருந்தேன் தண்ட சோர, என நீ குட்டிக்குரா
போலத்தான் பூசுற வாசமா வீசுற
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற

பழகின நண்பன விட்டேன், படிப்பையும் பட்டுனு விட்டேன்
அடிக்கடி தெருவ பாக்குறேன், வருவன்னு வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு
பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு
காரணம் நீயடி தூக்கவா காவடி
அடியே என்ன ராகம் …
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற…ஏத்துற…
அடியே என்ன ராகம்..
அடியே என்ன ராகம் ..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.