கூடமேல கூடவச்சி பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Rummy (2014) (ரம்மி)
Music
D. Imman
Year
2014
Singers
V. V. Prasanna, Vandana Srinivasan
Lyrics
Yugabharathi
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூடமேல கூடவச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபத்தாலே தேச்சு வெச்சேன் ஒரு வீரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

சாதத்துல கல்லுபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்து தான் பேசி
எதுக்கு சடபின்னுற
சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற

கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன

எங்கவேணா போய்கோ நீ
என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரமேல தலசாயுமே
மறைஞ்சி போனாலும்
மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே

கூடமேல கூடவச்சி கூடலூரு…கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போகசொன்னா

என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு வாரமா
நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.