ஏன் ஆள பாக்க பாடல் வரிகள்

Movie Name
Kayal (2014) (கயல்)
Music
D. Imman
Year
2014
Singers
Shreya Ghoshal
Lyrics
Yugabharathi
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே ...
என்ன......
தரபோறேன்.......
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன்
கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன்
இதுதான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து
என சொல்லி ஆசையில் அல்லாடுவான்
மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்
அத நான்..........
பார்த்தே .......
அழபோறேன் .......
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

உன்னாலதான் தூங்கலன்னு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன்
புதுசா புழுகாமா, ரொம்ப பெருசா வழியாம
அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா
ஆக போகுறனு அப்பாவியா
நானே ...
கேட்டு....
வரப்போறேன்.....

ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சிக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே ...
என்ன......
தரபோறேன்.......

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.