மெதுவா மெதுவா பாடல் வரிகள்

Last Updated: Feb 07, 2023

Movie Name
Pirivom Santhippom (2008) (பிரிவோம் சந்திப்போம் )
Music
Vidyasagar
Year
2008
Singers
Harini, Karthik
Lyrics
Kabilan
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா

நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ
ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ
வணக்கத்திற்குரிய உறவு இதுவே
சிறை புகுந்து விட்டால் இமையே கதவே
இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன்
இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன்
இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா

உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா மரமா விழுதா
உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா
கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன்
இனி இழப்பதற்கு எதை நான் தருவேன்
நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
ஹா…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.