தொடுவேன் தொடுவேன் பாடல் வரிகள்

Movie Name
Deepavali (2007) (தீபாவளி)
Music
Yuvan Shankar Raja
Year
2007
Singers
Haricharan
Lyrics
Kabilan
தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள் 
அன்பே நீ என் ஆயுள்தானே 
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே
இருவிழி பார்வை ஊடகம் இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத்துளியே
தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்
ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்ணின் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ என்ன நீ 
பூவில் பூத்திருக்கும் பனியா நீ
மௌனக் கூச்சலிடும் இசையா நீ
முத்தம் சேகரிக்கும் முகமா நீ
தூண்டில் பார்வையால் தொலைந்துவிட்டேன்
ஆசை அலைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல வீசுதடா
ஆனால் இதழ்கள் வயிற்றினில்
உண்மை சொல்ல கூசுதடா
தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்

கண்ணால் காதலினை மெதுவாய் சொல்
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்
சொல்லடி சொல்லடி பாதிராத்திரியில் விழித்தேனே
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே
ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்
உன் போல் இவளின் விழிக்குள்ளே
தூக்கம் தூக்கம் இல்லையடா
ஏனோ இதயம் அடிக்கடி ஏக்கம் ஏக்கம் தொல்லையடா

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.