மின்னல்கள் கூத்தாடும் பாடல் வரிகள்

Movie Name
Polladhavan (2007) (பொல்லாதவன்)
Music
G. V. Prakash Kumar
Year
2007
Singers
Karthik
Lyrics
Kabilan
ஆண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக் காலம்
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததே
எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடி..

பெண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக் காலம்
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா..

இரு: எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடா..

(இசை...)

ஆண்: முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்தில்
தலை அணை உறையின் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே
காலைத் தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்று ஒரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெண்: காதலில் ஒரு வகை ஞாபக மறதி.. கண்ணில் நடப்பது மறந்திடுமே..
வெளவாலைப் போல் நம் உலகம் மாறி.. தலை கீழாக தொங்கிடுமே..
உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா
ஆண்: எடை குறையுதே.. தூக்கம் தொலையுதே.. ஐயோ.. பைத்தியமே பிடிக்கிறதே..

(இசை...)

பெண்: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே
ஓ.. குட்டி பூனைக்கு முத்தம் குடுத்தேன் மயக்கத்திலே

ஆண்: ஓ.. காதலும் ஒரு வகை போதை தானே.. உள்ளுக்குள் வெஎன் ஏற்றுபேர் பேய் போல..
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்.. புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல..

பெண்: உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா..
எடை குறைந்ததே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ.. பைத்தியமே பிடித்ததடா.. (மின்னல்கள்...)

இரு: உடல் கொதித்ததே.. உயிர் மிதந்ததே.. ஐயோ.. அது எனக்கு பிடித்ததடா..
எடை குறைகிறதே.. தூக்கம் தொலைந்ததே.. ஐயோ பைத்தியமே பிடித்ததடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.