நீயே சொல் உன் பாடல் வரிகள்

Movie Name
Polladhavan (2007) (பொல்லாதவன்)
Music
G. V. Prakash Kumar
Year
2007
Singers
Benny Dayal
Lyrics
Kabilan
பெண்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா
நீயே சொல் உன் முத்தம் வேண்டும் மோகம் அடங்குமா
நீயே சொல் உன் எச்சில் விழுந்து தீயும் அணையுமா

ஆண்: விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது
விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி தொலையாது

பெண்: பூமியில் சில இடங்களில் நதிகள் கிடையாது
காதலில் பல இடங்களில் விதிகள் கிடையாது

ஆண்: ஓ.... நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...
நீயே சொல் என் முத்தம் விழுந்து உன் மோகம் அடங்குமா
நீயே சொல் என் எச்சில் விழுந்து உன் தீயும் அணையுமா...

(இசை...)

பெண்: போர்வைக்குள் பூப்பூக்க வைக்க வா.. வா..
வேர்வைக்குள் விவசாயம் செய்ய வா.. வா..
ஆண்: மஞ்சத்தைப் பரிமாற வேண்டும் வா.. வா..
மரியாதை தெரியாத முத்தம் தா.. தா..

பெண்: கட்டில் மேல் என்ன பண்பாடு
காதலால் காதல் வேர்கள் தொடு தொடு

ஆண்: நூறு முறை தொட்டு வைக்கிறேன்
நுனிநாக்கில் பொட்டு வைக்கிறேன்
உயிர் மட்டும் விட்டு வைக்கிறேன்
கண் தூங்காமல் விடிய வைக்கிறேன்

பெண்: அச்சத்தை விலக வைக்கிறாய்
வெட்கத்தைக் கலைய வைக்கிறாய்
ஆடைகளை நெகிழ வைக்கிறாய்
இனிமேல் எனை என்ன செய்குவாய் (ஓ.. நீயே சொல்...)

(இசை...)

ஆண்: உடலைப் போல் அழகான பண்டம் இல்லை
உதவாத பாகங்கள் இங்கு இல்லை

பெண்: உன் வாயோடு வாய் வந்து கொஞ்சும் லீலை
வலியாலே இன்பங்கள் செய்யும் லீலை

ஆண்: மூங்கிலினில் பரவும் புயல் போலே
உனதுடல் மீது உதடும் பரவுது

பெண்: இப்படியே உயிரும் இனிக்குமா
இவ்விதமே சொர்க்கம் கிடைக்குமா
இக்கணமே செத்து விடட்டுமா
நெஞ்சு இத இப்ப வலி பொறுக்குமா

ஆண்: இது போலே சமையம் வாய்க்குமா
என் மடியில் இமயம் சரியுமா
என் உயிரில் மலைகள் உருகுமா
பூமி கடந்தெங்கும் போவோமா (நீயே சொல்...)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.