நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்

Last Updated: Feb 03, 2023

Movie Name
Yaan (2014) (யான்)
Music
Harris Jayaraj
Year
2014
Singers
Chinmayi, P. Unnikrishnan
Lyrics
Kabilan
நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே

பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே

தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
வேரும் பூவும் வேறேன்று சொல்லாதே
காதல் அருகே இல்லை அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தா போனேன்
இறந்தா போனேன் வருவேன் ஓர் தினமே

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே

பூவைத் தொட்டு வந்தாலும்
கையில் வாசம் விட்டுப் போகாதே
உந்தன் மணம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ

கண்ணை மூடி தூங்க வேண்டும் 
ஆடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவையே தோழி

என்னை விட்டு நான் போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் மீன் ஆனேன் உன்னாலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை 
தவியாய் நான் தவித்தேன் 
காதல் கனவே உன்னை முழுதாய் காண
பிறையாய் நான் இளைத்தேன்

நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழை துளி எங்கே.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.