லட்சம் கலோரி பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Yaan (2014) (யான்)
Music
Harris Jayaraj
Year
2014
Singers
Chinmayi
Lyrics
Pa. Vijay
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில் நாடி துடிக்குதே

ஓ ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்
ஒன்றாகாவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
நியூரான்களும் சிணுங்கும் ப்ரோடான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிறங்கும் நீ ஒத்த வார்த்தை பேசினாளே

லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில் நாடி துடிக்குதே

உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா

உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா

ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து
ஹாலண்ட் வீதியில் செல்வோம் நடந்து
பனி பனி அது பொழிய
இருபது விரல் இணைய
இனி இனி இனி இதழ் நனைய
உயிர் மெல்ல மெல்ல மலர

லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே ஓ
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில் நாடி துடிக்குதே

லேசாய் அணைத்தாய் உள்மூச்சும் வெப்பம் கொண்டதே
உன்மேல் இணைத்தாய் உயிர் மொத்தம் ஜில்லாய் மாறுதே
உன்போல் பெண்மையை உற்று ரசித்தால்
தேன்போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும்
கிவி கனி இவள்தானா
தவ்விகொள்ள இதம் தானா
துள்ளி சென்று விடுவேனா
நித்தம் உன்னை அடைவேனா

லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கணத்தில் நாடி துடிக்குதே

ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்
ஒன்றாகாவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
நியூரான்களும் சிணுங்கும் ப்ரோடான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிறங்கும் நீ ஒத்த வார்த்தை பேசினாளே.

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.