Dhesa Kaatre Lyrics
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே பாடல் வரிகள்
Last Updated: Jun 01, 2023
ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
தென்னவனின் கூட்டத்தை நீ பார்
ஏய் தேர்தல் காலம் தோன்றும் போது
தென்னவனின் சக்தியை நீ பார்
இனிமேல் மக்களை காக்கும் மக்களின் தலைவன்
வானத்தில் இருந்து வரமாட்டான்
தென்னவன் என்னும் பேரினை தாங்கி
இதோ நம் முன்னே வந்தான் ஓஹோ.....(தேசக்)
புயல் காற்றை கைது செய்து கூண்டில் அடைத்தால்
அந்த காற்று என்ன பூப்பறிக்குமா
ஒரு வேங்கை சீறும் போது சட்டம் தடுத்தால்
அது கைகள் கட்டி நின்றிருக்குமா
அட உன்னை பூட்டி வைக்க சிறைகள் இல்லை
உன் கண்ணை ஜெயிக்க ஒரு நெருப்பும் இல்லை
நம் மண்ணை காக்க ஒரு தலைமை இல்லை
உன்னை விட்டால் இங்கே வேறாருமில்லை (தேசக்)
நீ சட்டம் கற்று வந்த சாணக்கியனே
இனி உன்னை இங்கு வெல்வதற்கு யார்
நீ திட்டம் தீட்ட வந்த தமிழ் வீரனே
இனி உன்னை குற்றம் சொல்வதற்கு யார்
நீ தேச தேரிழுக்கும் ஒரு சாரதி நீ
நாச பயிரறுக்கும் புது பாரதி
உன் கையில் தானிருக்கு தமிழன் விதி
நாம் வெல்லும் நாள்தான் விரைவில் சொல்வாய் நீதி (தேசக்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.