Englishil Paadinaa Lyrics
இங்கிலீஷ் பாடினா பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
ஏய் இங்கிலீஷ் பாடினா ஹோ
ஏய் சுத்தமா தமிழினில் பாடினா ஹோ
ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ
சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ
எல்லாமே எங்க இசைதானே
இசைக்கு எந்த மொழியும் கிடையாதே
எங்கேயும் இசை பொதுதானே
இசைக்கு எந்த தடையும் போடாதே (இங்கிலீஷ்)
நான் சொல்வதிங்கு சரிதானே
பூலோகம் எங்கும் இசையின் குரல்தானே
தந்தானேதானே தனன்னானே
எப்போதும் இது கிராமத்தின் இசைதானே
சிற்பம் செதுக்கும் ஒரு ஓசை
உளிகள் செய்யும் அது இசைதான்
சின்ன குழந்தையின் பாஷை
மொழிகள் தாண்டும் ஒரு இசைதான்
சில்வர் தட்டு உருண்டாலே
சமையல் அறையில் அது இசைதான்
சிணுங்கல் சத்தம் இருந்தாலே
படுக்கை அறையில் அது இசைதான்
ஆகாயம் மேகம் முட்டிக் கொள்வதால்
மூடிக் கிடக்கும் இடியும் இசைதானே
ஏய் சிக்குபுக்கு சத்தம் போட்டுத்தான்
தாலாட்டும் இந்த ரயிலும் இசைதானே
இசையை மறந்த ஒரு மனிதன்
மிருகமாகி விட கூடும்
இசையை ரசிக்கும் ஒரு மிருகம்
மனிதனாகி தலையாட்டும்
இசையை கேட்டு சில செடிகள்
வளர்ந்ததாக ஒரு செய்தி
இசையை இழந்த ஒரு இதயம்
என்றும் வாழ்க்கையில் கைதி
எப்போதும் இந்த இசை ரசிப்போம்
சங்கீதமதை உணவாய் நாம் புசிப்போம்
என்றென்றும் இசையில் வசிப்போம்
பாடல்கள் அதை பதமாய் நாம் ருசிப்போம் (இங்கிலீஷ்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.