மனசே இள மனசே பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Pudhiya Geethai (2003) (புதிய கீதை)
Music
Yuvan Shankar Raja
Year
2003
Singers
Swarnalatha, Tippu
Lyrics
Pa. Vijay
பாலு குலேதே பாலு குலேதே
பாலு குலேதே மஜீ ஹெலா கொரிஷ்ணா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
பாலு குலேதே தே தே தே பாலு குலேதே
பாலு குலேதே மஜீ ஹெலா கொரிஷ்ணா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா

மனசே இள மனசே மலரும் பூ மனசே
மனதில் நினைத்ததெல்லாம் நடக்கும் நாள் இதுவே
மனசே இள மனசே மலரும் பூ மனசே
மனதில் நினைத்ததெல்லாம் நடக்கும் நாள் இதுவே
ஒரு சொர்க்கத்திலே இது உருவான உறவா
இல்லை சொர்க்கத்தையே இங்கு உருவாக்கும் உறவா
ஆனந்தம் அலைமோதும் கண்ணில் என்னாளும்
கொண்டாட்டம் கும்மாளம் மண்ணில் எப்போதும்
கொண்டாட்டம் கும்மாளம் மண்ணில் எப்போதும்
என்றும் சந்தோஷம் எங்கும் சந்தோஷம்
வானம் வரைக்கும் அடடா எங்கும் சந்தோஷம்
ஒரு வயசு ஆனது போல் இன்பம் இருக்கு
ஒரு கோடி காலம் வாழ ஆசை எனக்கு
ஒரு கோடி காலம் வாழ ஆசை எனக்கு

ஒரு நாள் பூக்களும் தான் தலுக்கென புன்னகைக்கும்
சிரிக்கும் மனிதனுக்கே சிகரம் காத்திருக்கும்
பூ முதல் புல் வரைக்கும் ஒவ்வொன்றும் ரசித்திடலாம்
குயிலின் கூட்டுக்குள்ளே கொஞ்ச நாள் வசித்திடலாம்
வானவில்லை கண்டால் நீ விழி இமைக்காதே
அது மூணு நிமிஷம் தான் அதை இழந்து விடாதே
வானம் வரை எட்டும் எங்கள் வாழ்த்து சத்தம் தான்
காலம் கை தட்டும் இனி காதல் முத்தம் தான்
வானம் வரை எட்டும் எங்கள் வாழ்த்து சத்தம் தான்

ஆசை வந்தாச்சே ஆசை வந்தாச்சே
நெஞ்சுக்குள்ளே தான் புது புது ஆசை வந்தாச்சே
ஏதேதோ கனவுகள் தான் கண்ணில் வந்தாச்சே
இது போல வாழ்ந்திட தான் ஆசை வந்தாச்சே

வாழ்வில் ஒரு முறைதான் திருமண கோலம் வரும்
அடடா அன்று முதல் ஆனந்த தாளம் வரும்
ஒவ்வொரு இதயத்திலும் திருமண ஞாபகங்கள்
ஆயுள் காலம் வரை இருக்கும் ஆனந்தங்கள்
உறவுகள் தான் என்றும் உங்கள் கூட வருமே
அந்த உறவுகள் தான் வந்தால் அந்த வாழ்க்கை சுகமே
உலகத்தின் …
உலகத்தின் செல்வந்தன் ஆன ஒருவன்
ஒரு லட்சம் சொந்தங்கள் சேர்த்த மனிதன்

காதல் நெஞ்சமே காதல் நெஞ்சமே
இன்று சேர்ந்திடும் அழகே காதல் நெஞ்சமே
நூறாண்டு சேர்ந்திருக்க வாழ்த்தும் நெஞ்சமே
வாழ்வெல்லாம் சந்தோஷம் வந்து கொஞ்சுமே
காதல் நெஞ்சமே காதல் நெஞ்சமே
இன்று சேர்ந்திடும் அழகே காதல் நெஞ்சமே
நூறாண்டு சேர்ந்திருக்க வாழ்த்தும் நெஞ்சமே
வாழ்வெல்லாம் சந்தோஷம் வந்து கொஞ்சுமே

பாலு குலேதே பாலு குலேதே
பாலு குலேதே மஜீ ஹெலா கொரிஷ்ணா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
பாலு குலேதே தே தே தே பாலு குலேதே
பாலு குலேதே மஜீ ஹெலா கொரிஷ்ணா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா
உலதேனோ காமாஜி ஜாபோ மோதினா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.