அனார்கலி ஆகாயம் நீ பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Kangalal Kaidhu Sei (2004) (கண்களால் கைது செய்)
Music
A. R. Rahman
Year
2004
Singers
Karthik
Lyrics
Pa. Vijay
அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
உலகத்திலிலேயே மிக பெரும் பூவும் நீயடி
நதிகளிலேயே சின்னஞ்சிறு நதியும் நீயடி
சந்தித்தேன் அடி உன் கண்களால் சுவாசித்தேன் அடி உன் பார்வையால்

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
கடல் காற்று நீ நான் பாய்மரம் நதி காற்று நீ நான் தாவரம்

இயந்திர மனிதனை போல் உன்னை செய்வேனே
இரு விழி பார்வைகளால் உன்னையும் அசைத்தேனே...
அழகிக்கு எல்லாம் திமிர் அதிகம் அழகியின் திமிரில் ருசி அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
கவிஞனுக்கெல்லாம் குறும்பு அதிகம் கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
அதை இன்று நானே உன்னிடம் கண்டேன்
நடை நடந்து போகையில் நீ இலக்கணமே
ஞானம் கொண்டு பார்க்கையில் நீ இலக்கியமே

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..

நறுமணம் என்பதர்க்கு முகவரி பூக்கள் தானே என் மனம் என்பதர்க்கு முகவரி நீ தானே
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல் வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீதான்
இரவுகள் தோன்றும் கனவுக்கெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி என்னிடம் சேரும் முகவரி நீதான்
மழை துளிக்கு மேகமே முதல் முகவரி உன் இதழில் மௌனமே உயிர் முகவரியோ

அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ பூலோகம் நீ..
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டுபிடித்தேன்
சந்தித்தேன் அடி உன் கண்களால் சுவாசித்தேன் அடி உன் பார்வையால்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.