காதல் ஆசை பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Anjaan (2014) (அஞ்சான்)
Music
Yuvan Shankar Raja
Year
2014
Singers
Yuvan Shankar Raja
Lyrics
Kabilan
ம்… ந ந ந ந….
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
யோசனை ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
உன்னில் என்னை போல காதல் நேரமோ
 ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
 காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே

ஓ… பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிராய்
நினைவுகளில் மொய்க்காதே நிமிடமுல்லில் தைக்காதே
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்
உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்
 ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே

ம்… விழிகளிலே உன் தேடல் செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை
யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்
 ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.