ஜில்லா ஜில்லா பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Jilla (2014) (ஜில்லா)
Music
D. Imman
Year
2014
Singers
Viveka
Lyrics
Viveka
ஜில்லா ஜில்லா ஜில்லா
அட எங்கும் செல்வான் தில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா
ஹே எதையும் வெல்வான் தில்லா
வெப்பம் நீந்தும் தெப்பம் என
விழிகள் கொண்டவன் ஜில்லா
வேங்கை போல பாயும்
புது வேகம் கொண்டவன் ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

ஜில்லா ஜில்லா ஜில்லா
விழி பார்வை பாயும் முள்ளா
ஜில்லா ஜில்லா ஜில்லா
பகை சிதறும் சில்லு சில்லா
துஞ்சா அஞ்சா நெஞ்சம்
அதன் பேர் தான் இங்கே ஜில்லா
தொட்டால் பூமி அதிரும்
ஒரு தூய வீரன் ஜில்லா

இரு விழி அருகினால் எரிமலை வெடிக்கும்
நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும்
எலும்புகள் உடைபட கயமைகள் சிதறும்
இவனுடன் போர் இட யாருக்கும் உதறும்
குழி பறித்தவனது குருதியில் நனைப்பான்
குலம் கெடுப்பவனது குடல் உருவிடுவான்
வழி தடுத்தவனை சத கூறிடுவான்
வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான்

ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் ரத்தம் எங்கும் சத்தம்
ஜில்லா ஜில்லா ஜில்லா
உன் சித்தம் எல்லாம் யுத்தம்
போட்டி என்று வந்தால்
கை இடியாக மாறும்
மூச்சு காற்று மோதி
பெரும் தடைகள் எல்லாம் சாயும்

ஜில்லா ஜில்லா ஜில்லா
ஜில்லா ஜில்லா ஜில்லா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.