மனமெங்கும் மாய ஊஞ்சல் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Gypsy (2020) (ஜிப்ஸி)
Music
Santhosh Narayanan
Year
2020
Singers
Ananthu, Dhee (Dheekshitha), Haricharan
Lyrics
Yugabharathi
மனமெங்கும் மாய ஊஞ்சல்
மனமெங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட
உயிர் உள்ளே சாரல் போட

கோடையும் வாடையும்
பாத்திடா தாவரம்
வரம் நீ தந்தாய்
குழு : வான் பூக்குதே

நான் உன் தோளில் கண் சாய
வெண்மீன்கள் பொன் தூவ
ஆஅ…ஆஅ….ஆ….ஆ…

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட

முத்தம் வைக்கும்
வேனீர் காலங்கள்
கட்டி கொள்ளும் ஈர கோலங்கள்

உன் கால் தடம் நானே
என் தாய் நிலம் கண்டேனே
தடாகம் தேகம் வாழும்
காணும் மீன்கள் நீ
நான் மண் சேர்ந்து நீர் போல
உன் சாயல் கொண்டேனே
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஆ…

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி

எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட


மரம் ஒரு இசை
மொட்டரும்பு ஒரு இசை
கடல் ஒரு இசை
நம் உடல் ஒரு இசை
நிலவொளி வீசும்
காற்றில் பேசும்
பறவையின் தாய்மை யாழிசை

வெண் சிறகை வீசும்
மூச்சு காற்றிலே
கண் உருக பாடும்
கோடி மூங்கிலே

உன் மொழிகளோடு
தேன் வழிகிறதே
என் மார்பிலே
நீ பேசும் வாசம்
நீ அல்லவா….ஆஅ…ஆஅ…ஆ….

காற்றிலே சிறகை நாம் விரித்தால்
துளி ஆகாதோ பூமி
வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்
அதற்கீடேது சாமி

ஆஅ…..ஆஅ….ஆ…ஆ…ஆ….ஆஆ….
எங்கும் மாய ஊஞ்சல்
உனதன்பில் ஆட ஆட
மழை பொங்கும் தூய மேகம்
உயிர் உள்ளே சாரல் போட

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.