காத்தெல்லாம் பூ மணக்க பாடல் வரிகள்

Movie Name
Gypsy (2020) (ஜிப்ஸி)
Music
Santhosh Narayanan
Year
2020
Singers
Pradeep Kumar
Lyrics
Yugabharathi
காத்தெல்லாம் பூ மணக்க
கடலெல்லாம் மீன் சிரிக்க
ஊத்தாட்டம் உன் வனப்பு
உள்ள வந்து பூந்திருச்சே
பாக்காத ஜோதி எல்லாம்
பார்த்தேனே உன் முகத்தில்
நோக்காம போகறதென்ன வெள்ளி நிலவே

காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே

பால் வழி தெருவில்
அமுதூரிய முகமே
உனக் காண காண
உரையாதோ காலம்
ஒளியாதே ஒழியே
திரை மறையாதே பிறையே
கடல் மடி போலே என்னையே
உயிர் தளுவாயோ துணையோ

உன்ன போல யாரோ
கூட வருவாரோ
உள்ளவரை மண் மேலே….
நாடோடி நானே
நீயும் என்னை போலே
ஹூ ஹூஒ ஓ ஹோ

காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே

பறவை மொழிகள்
தெரிந்தே காடவோம்
இரவின் கிளையில்
இசைகள் கூடவும்

இயற்க்கை மடியில்
மரிக்கும் அகந்தை
கிழிஞ்சல் நிலவை
எடுக்கும் குழந்தை
சிவனின் சங்கீதம்
புகை ஆகுதே
நொடியில் பேரண்டம் உருவாகுதே
சுகமாகுதே சுகமாகுதே

வேண்டாமே ஊர்கள்
வேண்டாமே பேர்கள்
வைக்காமல் போவோம் தடையங்களே

காட்டு காட்டு காட்டு
கண்ணில் திசைய காட்டு
மீட்டு மீட்டு மீட்டு
மண்ணில் இசைய மீட்டு
ரெண்டு கண்ணுக்குள்ள
ரெக்க கட்டுற உன்ன
அள்ளி கொண்ட என்ன தங்க நிலவே

தங்க நிலவே…ஏ…
தங்க நிலவே…ஏ…
தங்க நிலவே…ஏ…ஏ….ஏ…

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.