பச்சை துரோகங்கள் சாகாமல் பாடல் வரிகள்

Movie Name
Adanga Maru (2018) (அடங்க மறு)
Music
Sam C. S.
Year
2018
Singers
Haricharan
Lyrics
Yugabharathi
பச்சை துரோகங்கள் சாகாமல்
பல்லை இழிக்கும் நாள் தூரம்
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்
தொடரும் நிலையே சேதாரம்

குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

உள்ளவை மொத்தமும் தாவென்று
நாய்களும் பேய்களும் வாலாட்ட
நல்லதை நம்பி நீ போர் செய்யும்
தருணம் தருணம்

வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்
சத்தியம் ஒன்று தான் உன் கையில்
கவனம் கவனம்

ஆஅ ஊரையும் பேரையும்
வாங்க வா போராட்டம்
தீமையை தீயிலே
போடவே ஆர்பாட்டம்

வளைந்து நெளிந்து
கிடக்கும் வரைக்கும்
கணக்கு வழக்கு
தீராதே

நிமிர்ந்து எழுந்து
உதைக்க தொடங்கு
எதற்கும் பயந்து
ஓடாதே

கொள்ளையும் தொல்லையும்
கூட் என்று
கூனி நீ போவது தீர்வில்லை
வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்
பணியும் ஜகமே

கல்லையும் மண்ணையும்
போல் இங்கு
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்
உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற
நிலைமை வருமே

குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

தடத் தட்ட டா டாட் ஆ
தடத் தட்ட டா டாட் ஆ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.