கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடல் வரிகள்

Movie Name
Rekka (2016) (ரெக்க)
Music
D. Imman
Year
2016
Singers
Nandini Srikar
Lyrics
Yugabharathi
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே
சோறாகிப் போகுதே
வானவில் நீ சூடிட மேலாடையாகுதே
கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா...
உன்னை உள்ளம் என்னுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான்
கண்ணம்மா... கண்ணம்மா...
என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.