கொக்கர கொக்கரக்கோ பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Ghilli (2004) (கில்லி)
Music
Vidyasagar
Year
2004
Singers
Sujatha Mohan, Udit Narayan
Lyrics
Yugabharathi
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்
தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ

வெள்ளிமணி கொலுசுக்குள்ளே துள்ளுகிற மனசுக்குள்ளே
சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்

தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்

ஏல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன்

எண்ணம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னாலே
ஏ நீ துணிஞ்சா உலகம் உனக்கு பின்னாலே

குதுவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது

நம்ம பக்கம் காத்து வீசுரத பாத்து
நல்லவங்கள சேர்த்து நீ போடு தினம் கூத்து

தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக் தூம் ஷாக்

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ

கந்தனுக்கு வள்ளிய போல கன்னனுக்கு ராதைய போல
ஆசைகொண்ட உயிருகெல்லாம் துனையிருக்கு பூமியிலே

தூம் ஷாக் தூம் தூம் தூம் ஷாக்

கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை

ரெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு

ஹேய் சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு
சிட்டான் சிட்டாஞ் சினுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு
கெட்டத தான் ஒதுக்கு இனி நம்ம கிட்ட கெழக்கு

கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ
சங்கு சக்கரம் போலே மனசு சுத்துர வேளை
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
ஆதோ பாரு வானம்
துணி துவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.