அய்யய்யயே ஆனந்தமே பாடல் வரிகள்

Movie Name
Kumki (2012) (கும்கி)
Music
D. Imman
Year
2012
Singers
D. Imman, Haricharan, Yugabharathi
Lyrics
Yugabharathi
அய்யய்யயோ ஆனந்தமே (ஆ)
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யோ...

அய்யய்யய்யோ... ஓ... ஓ... அய்யய்யய்யோ...

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தோடுதே... சுடுதே... மனதே...

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அனணத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா... வரவா... தரவா.....

அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே

ஏதோ ஒரு ஆசை
வா வா கதை பேச
அய்யய்யயோ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.