நாட்டுச் சாலையிலே நல்லவங்க மத்தியிலே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Vetrivel (2016) (வெற்றிவேல்)
Music
D. Imman
Year
2016
Singers
Jayamurthy, V.M. Mahalingam, Amali, Anitha Venkat
Lyrics
Yugabharathi

நாட்டுச் சாலையிலே நல்லவங்க மத்தியிலே
பாட்டெடுத்து வந்தோம் பாசத்தோட உங்களுக்கு
ஊரு பல பாத்தவங்க ஒண்ணாக வந்திருக்கோம்
பேரு புகழ் வாங்கிடவே பெரும் பாடு பட்டிருக்கோம்

ஆச தோச அப்பள வட ஐயா யாரு உங்களவிட
ஊசி மாசி விக்கிற கட ஓய்வில்லாத இந்தியப் பட
எங்கள கூட்டி நடத்தியது நாட்டியம்
நீங்க ரசிச்சுப் பாக்க கெடைக்குமுங்க பாக்கியம்
இந்தா இந்தா இந்தா இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா

முறுக்கு மீச மாமா நீங்க முடிவ சொல்ல வேணும்
பாசம் வெச்ச என்ன நீங்க சேரணுமே
நெஞ்சு மேல சாயணுமே நேசத்தோடு பேசணுமே
கொஞ்சிப் பேசும் உங்கள நான் குஞ்சமாக போடணுமே
மொற மாமா தொட வாங்க மொறையாக முத்தம் தாங்க முறுக்கு)

ஏம் மாமா ஏம் மாமா ஏமாந்து போலாமா
வா மாமா வா மாமா வழுக்காம தா மாமா
வாழத் தோப்பு அழகு நீ வந்து மெல்ல பழகு
ஏதும் இல்ல கதவு நீ ஓடி வந்து உதவு

ஒதவிட்டாலும் ஹும்...
நாய் கெட்ட கேட்டுக்கு தேங்காப் பால் சோறா
அது கெட்ட கேட்டுக்கு அம்மாவாச வெரதமாம்..ம்... ம்...

சீல கட்டி வந்தவளே சிரிச்சு என்ன உசுப்புறியே
வேலவெட்டி செய்ய வந்தா வில்லங்கமா மொறைக்குறியே
ஆணி முத்துமால நீ அசத்திப் போற ஆள
பாம்பு புத்து மேல நீ ஊத்த வேணும் பால

குழலுன்னா வேணுமடி ஓட்ட
அழகு குமருன்னா செய்யணுமே சேட்ட ஏய்
வருவேண்டி நல்ல வழி காட்ட
வந்து பொரட்டத் தான் போறேன் உன் ஏட்ட

மஞ்ச சேலக்காரி உன் மேல் மனச வச்சேனே
உன்ன மால மாத்தி கூட்டிப் போக பரிதவிச்சேனே
கொஞ்ச நேரம் நீயும் பாக்க வழியிறேனடி
உன் கொண்ட ஊசி போல நானும் நெளியிறேனடி
அத்த பெத்த அச்சு வெல்லம் ஆள தூக்குற
என்ன எச்சி பண்ணி போக ஏண்டி தேதி பாக்குற

உங்கப்பன உங்கப்பன
உங்கப்பன நீ கூட்டி வந்து பொண்ணு கேளு
நான் பெத்து தரேன் பத்து புள்ள தங்கவேலு
அப்புறம் நீ என்ன நீயும் வச்சு வாழு

நீ எப்ப வந்து ஊனப் போற பந்தக் காலு
வாய வச்சுக்க வாங்கி கட்டிக்க
பாய இட்டுக்கோ தங்கவேலு
தேன சொட்டிக்கோ தேளா கொட்டிக்கோ
வாவா ஒட்டிக்க தூளு

ஏ வாவா வாவா என்னாங்குற
என்ன தாதா தாரேன் வேணாங்குற
ஏ வாவாவா ஏ வாவாவா
ஏ வா ஏ வா ஏ வா...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.