அன்புதான் இருக்கையிலே பாடல் வரிகள்

Movie Name
Manjapai (2014) (மஞ்சப்பை)
Music
N. R. Raghunanthan
Year
2014
Singers
Krishnaraj
Lyrics
அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி 
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி 

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி 
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி 

காத்துக்கு மரமிருக்கு கடலுக்கு அலையிருக்கு 
ஊத்துக்கு மணலிருக்கு, உனக்கும் ஒரு உறவிருக்கு 
கண்டத எண்ணி கலங்கி நின்னா கண்ணே சங்கடம் 
நீ நல்லதை எண்ணி பொருத்திருந்தா ஊரோ உன்னிடம் 

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி 
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி 

போற வழி போயிருந்தா புன்னகையும் கூட வரும் 
வேதனையை வீசிடு நீ வெற்றி உன்னை தேடி வரும் 
சோலையில பூ இருந்தா வண்டு அதை நாடி வரும் 
சொல்லும்படி வாழ்ந்திடு நீ சோகம் எல்லாம் ஓடி விடும் 
ஓடை வத்தி போனதும் ஓடம் எங்கு போகுதுனு 
தண்ணி வரும் நாள் வர காத்து தானே கிடக்குது 
கலங்காம இருந்தாலே கிடையாது தீது 

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி 
அனாதை யாருமில்ல மனசுல வைய்யி தாயி 

நாருலத்தான் வாசனைய தேடுவது நாயமில்லை 
வானவில்லை தூர நின்று கண்டவங்க யாருமில்ல 
ஆசை அது தீரும் வர வாழ்வது வாழ்க்கையில்ல 
அன்பு கொண்ட நெஞ்சினிலே துன்பம் 
என்றும் சேர்வதில்லை 
சேத்துக்குள்ளும் தாமரை உள்ளதா நீ பார்த்திடு 
என்ன நடந்தாலுமே உள்ளவர சிரிச்சிடு 
துணிஞ்சி நீ நடபோடு தொடராது கேடு 

அன்புதான் இருக்கையிலே கவலை எதுக்குத்தாயி 
அனாதை யாருமில்லை மனசுல வைத்தாயி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.