அப்பன் வீட்டு பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Desiya Geetham (1998) (தேசிய கீதம் )
Music
Ilaiyaraaja
Year
1998
Singers
Pushpavanam Kuppusamy
Lyrics
அப்பன் வீட்டு சொத்தை போல அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுரீக
அப்பன் வீட்டு சொத்தை போல அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுரீக
துப்பு கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுரீக
எக்கு தப்பா கேள்வி கேட்க ஆளில்லைன்னு நேனைக்கிரீக
ரோடு போட ஒதுக்கி வெச்சத வீட்டுக்குன்னு பதுக்குரீக
நாட்டு நிலை மறந்து உங்க பாட்டுக்குத்தான் அலையுரீக
நாயி படுற பாடு நம்ம நாடு படுத்து பாரு
ஓட்டு போட்டது ஊரு உங்கள தூக்கி போடுவது யாரு

ஹைதர் அலி காலத்துல போட்ட ரோடு மாறலையே
எத்தனையோ கட்சி வந்தும் எங்க கொறை தீரலையே
குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியலையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேட்க வழியில்லையே
குத்தம் கொறை சொல்ல வந்தா ஏழையை தான் ஏசுறீங்க
மத்தபடி மந்திரி வந்தா தாறேடுத்து பூசுரீக
தூக்கி போடுது ரோடு அத மாத்தி போடுவதாறு
கர்ப்பிணி பொண்ணுங்க பாடு பத்து மாச கணக்க தீக்குது ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு