என் கனவினை பாடல் வரிகள்

Movie Name
Desiya Geetham (1998) (தேசிய கீதம் )
Music
Ilaiyaraaja
Year
1998
Singers
Hariharan
Lyrics
என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் கனவினை கேள் நண்பா

என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
ஒரு புறம் வறுமையும் மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை மாளிகை அறிந்திடுமா
நண்பனே இது மாறவேண்டும் பசியார வேண்டும்
இந்த இளைஞர் கையில் எங்கள் தேசம் மாறவேண்டும்
என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்

மகராசன் சீமையில மழையில்லாம இருந்ததொரு காலம்
அட காந்தி போல் தலைவர் வந்ததனால்
நாடு இப்போ செழிச்சு வளங்கொழிச்சு
பஞ்சம் பசி தீர்ந்ததடியோ
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா
ஹொய்ய ஹொய்யா ஹொய்யா

பாட்டி பால் விற்ற கணக்கை கம்பியூட்டர் பதிய வேண்டும்
நாற்று நாடுகின்ற பெண்ணும் செல்போனில் பேச வேண்டும்
ஆம் செல்போனில் பேச வேண்டும்
உழவன் ஏரோட்ட பென்சு காரோட்டி போக வேண்டும்
விளையும் பயிருக்கு நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
ஒலிம்பிக் கேமில் சிலம்பம் ஆடி ஜெயித்திட வேண்டும் வேண்டும்
வேற்று நாட்டோன் நமது நாட்டில் வேலைக்கு அலைய வேண்டும்
ஏழை நெஞ்சில் கோடி ஆசைகள் செய்ததென்ன உங்கள் அரசியல்
சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதற்கு
தோழனே
என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்

ஆ… பட்டி தொட்டிக்கும் பளிங்கு கல்லாலே ரோடு வேண்டும்
நடை பாதை மேல் தூங்கும் ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும்
ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும்
இருக்கும் பல கட்சி மாறி ஒரு கட்சியாக வேண்டும்
மக்கள் நம் மக்கள் என்ற உணர்வுள்ள தலைவன் வேண்டும்
உண்மை உணர்வுள்ள தலைவன் வேண்டும்
தேர்தல் கணையாய் இருக்கும் மக்கள் வெடித்திட வேண்டும் வேண்டும்
உலக அரங்கில் நமது நாடு முதல் இடம் வாங்க வேண்டும்
இந்தியாவின் இளைய கூட்டமும் இளைத்ததல்ல எந்த நாட்டுக்கும்
சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதற்கு
தோழனே
என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
ஒரு புறம் வறுமையும் மறுபுறம் கொடுமையும்
ஏழையை விரட்டுது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை மாளிகை அறிந்திடுமா
நண்பனே இது மாறவேண்டும் பசியார வேண்டும்
இந்த இளைஞர் கையில் எங்கள் தேசம் மாறவேண்டும்
என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
என் கனவினை கேள் நண்பா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.