உயிரிலே என் உயிரிலே பாடல் வரிகள்

Movie Name
Velli Thirai (2008) (வெள்ளித் திரை)
Music
G. V. Prakash Kumar
Year
2008
Singers
Naresh Iyer
Lyrics
உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன்
நானடி

விழியிலே உன் விழியிலே
விழுந்தவன் தானடி

உயிருடன் சாகிறேன்
பாரடி

காணாமல் போனாயே
இது காதல் சாபமா

நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன்
நானடி

கனவுகளில் வாழ்ந்து விட்டேன்
இறுதிவரை

கண்களிலே தூவி விட்டாய்
மண் துகளை

இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது

ஆறாத காயங்கள்
என் வாழ்கை பாடமா

இனி தீயே வைத்து எரித்தாலும்
என் நெஞ்சம் வேகுமா

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல

ஆண் நெஞ்சம் எப்போதும்
ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும்
பழுதான தேரடி

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.