விழியிலே என் விழியிலே பாடல் வரிகள்

Movie Name
Velli Thirai (2008) (வெள்ளித் திரை)
Music
G. V. Prakash Kumar
Year
2008
Singers
K. S. Chithra
Lyrics
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள்
தழும்புதே

கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே

முத்தமிட்ட உதடுகள்
உளறுதே

நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்

என் கண்ணீர் துளியில் நமக்காக
ஒரு மாலை சூடினேன்

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள்
தழும்புதே

இமைகளிலே கனவுகளை
விதைத்தேனே

ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே

இங்கு வெறும் காற்றிலே
நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்

உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலை தூரம்தான்

நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே

அந்த சாம்பல் மீதும் உனக்காக
சில பூக்கள் பூக்குமே

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே

உயிரிலே நினைவுகள்
தழும்புதே

உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்

யாருக்குத்‌தான் நம் காதல்
விடை தெரியும்

காதல் சிறகானாது
இன்று சருகானாது

என் உள் நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை எது என் பயணம் அது
பனி திரை ஒன்று மறைக்கின்றது

ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா

விதி கண்ணாமூச்சி விளயாட
நாம் காதல் பொம்மையா

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.