கண்களிலே ஒரு கடுகளவு பாடல் வரிகள்

Movie Name
Pencil (2015) (பென்சில்)
Music
G. V. Prakash Kumar
Year
2015
Singers
Javed Ali, Shreya Ghoshal
Lyrics
கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

எனக்கே தான் தெரியாமல்
எனை சிறுக சிறுக இழந்தேன்

கல்லை குளத்தினில் எறிந்தாய்
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்

ஓ தள்ளி நடந்திட விரும்பி
நீ மெல்ல அருகினில் வந்தாய்

முதன் முதலாய் முகவரியாய்
உனை நினைத்தேன் நல்ல முடிவெடுத்தேன்

மேலாடை தொடுமோ மூச்சென்னை தொடுமோ
கை விரல் தொடுமோ கால் நகம் படுமோ

பட்டாடை இல்லாமல் பூ போட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ

ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

வண்ண உடைகளில் வந்தால் என் எண்ணம் சிதறுது பெண்ணே
என்னை மறைத்திட்ட போதும் அதை காட்டி கொடுப்பது கண்ணே

ஒரு புறம் நீ மறு புறம் நான்
இடையினில் யார்
வெட்கம் தடுப்பதை பார்

எங்கே நான் சென்றாலும் என் பாட்டில் நின்றாலும்
பின்னாலே நீ வந்தாய் பேசாமல் ஏன் சென்றாய்

கார் காலம் போல் இன்று சங்கீத சொல் ஒன்று
நீ வீசி சென்றாலும் போதாதோ எனக்கு

கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

எனக்கே தான் தெரியாமல் எனை சிறுக சிறுக இழந்தேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.