தோல்வி நிலையென பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Oomai Vizhigal (1986) (ஊமை விழிகள் )
Music
Manoj
Year
1986
Singers
P. B. Srinivas, Aabhavanan
Lyrics
Aabhavanan
தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா

குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
குழு : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.