கெடைச்சிருச்சு கெடைச்சிருச்சு பாடல் வரிகள்

Movie Name
Vidukathai (1997) (விடுகதை)
Music
Deva
Year
1997
Singers
Krishnaraj, Anuradha Sriram
Lyrics

கெடைச்சிருச்சு கெடைச்சிருச்சு கெடைச்சிருச்சு
ஆங் கெடைச்சிருச்சு கெடைச்சிருச்சு கெடைச்சிருச்சு

பயணிகள் கவனிக்கவும்.....
சென்னையிலிருந்து மும்பை செல்லும்
இண்டியன் ஏர்லைன்ஸ் விமானம்
இன்னும் சற்று நேரத்தில்
நான்காவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்
பயணிகள் தங்கள் பயணச்சீட்டை
நடத்துனரிடமிருந்து பெற்று கொள்ளவும்.....

குசும்புக்காரி ரொம்ப குறும்புக்காரி
ஆங்..குறும்புக்காரிதான் ஆனா புத்திசாலி நான்
உன் புத்திசாலித்தனத்தை பார்ப்போமா
பார்க்குறீங்களா புத்திசாலித்தனத்தை.....

கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்
ஒண்ணாங்கிளாஸு கேள்வி இது ஒண்ணாங்கிளாஸு கேள்வி....

ஓடுடையார் பிச்சை ஒரு போதும் கேட்டறியார்
காடே திரிவார் அவர் தீர்த்தக்கரைதனில் போவார்
நடக்கும் கால் நான்கு நல்ல சிரசு ஒன்று
படுக்கும்போது ஒன்றுமில்லை..
இன்னொரு தடவை சொல்லுங்களேன்......(ஓடுடையார்)

அது ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஆமை ஆமை ஆமை..
இப்ப உங்க புத்திசாலிதனத்தை பார்க்கலாமா...பாக்கலாமே.....
ஒரு பொண்ணு குளிச்சிட்டு போறா ஒருத்தன் அவகிட்டே....
குளிச்சு முழுகி போற குமரிப்பொண்ணே
நீ குளிக்கையிலே நனையாதது எந்த இடம்
அது எந்த இடம்...யாயையை யாயையை...
அவன் கேட்டான் அது எந்த இடம்......சீ.....

இதில் தப்புமில்லை ஒரு தவறுமில்லை
அவ மனசு மட்டும் அங்கு நனையவில்லை
பொண்ணோட மனசுலதான் காதலில்லை அய்யாவே
அதனாலே அவள் மனசு மட்டும் நனையவில்லை அய்யாவே
உம் மனச நனைக்க நான் வரவா
அவன் கேட்டுப்புட்டான் பதிலை சொல்லிப்புட்டான்

இன்ப ராசன் செத்து இளையராசன் பட்டம் கட்டி
பட்ட மரத்தோட பட்ட மரம் ஒட்டி
பத்து பேர வெட்டி பதினாறு பேர தீட்டி
வெட்டுக் குதிர ஏறி வான்னு சொன்னாளாம்
அவ வான்னு சொன்னாளாம்.....
ஒண்ணும் புரியல்ல அட ஒண்ணும் புரியல்ல

இந்த ராசன் செத்துன்னா சூரியன் போயி..
இளையராசன் பட்டம் கட்டின்னா..சந்திரன் வந்து
பட்ட மரத்தோட பட்ட மரம் ஒட்டின்னா...
எல்லார் வீட்டு கதவையும் இழுத்து சாத்துனத்துகப்புறம்
பத்து பேர வெட்டின்னா விரல் நகத்த வெட்டி
பதினாறு பேர தீட்டின்னா பல்ல நல்லா விலக்கி
வெட்டுக் குதிர ஏறின்னா செருப்ப கால்ல மாட்டி
வான்னு சொன்னாளாம் அவ வான்னு சொன்னாளாம்.....
ஏன்னு தெரியுமா அது ஏன்னு தெரியுமா

அவள் எண்ணம் புரியவில்லை அதனாலே தூக்கமில்லை
என்ன சொல்லத் தெரியல்லையே நீ
வா வா வாழ்வில் வானவில்லே காதல் காதல் ஆனதிங்கே
அம்மம்மா ஆசை வேஷம் போனதே....
என்ன சொன்ன......என்ன சொன்ன....

வா வா வாழ்வில் வானவில்லே காதல் காதல் ஆனதிங்கே
அதுக்கு முன்னாலே......அதுக்கு முன்னாலே.....
அவள் எண்ணம் புரியவில்லை அதனாலே தூக்கமில்லை
என்ன சொல்லத் தெரியல்லையே நீ...
அதுக்கு முன்னாலே......அதுக்கு முன்னாலே.....

எல்லாத்துக்கும் முன்னாலே
ஒண்ணு சொன்னேன் தெரியுமா...என்ன...
கெடைச்சிருச்சு ஆஹாங் கெடைச்சிருச்சு.....
கெடைச்சிருச்சு ஆஹாங் கெடைச்சிருச்சு.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.