விண்ணுக்கும் மண்ணுக்கும் பாடல் வரிகள்

Last Updated: Sep 24, 2023

Movie Name
Vidukathai (1997) (விடுகதை)
Music
Deva
Year
1997
Singers
Sabesh, Sujatha Mohan
Lyrics
Agathiyan

ஹலோ ஹலோ ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ.......

விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஹலோ ஹலோ
நேற்றைக்கும் நாளைக்கும்
நாம் வாழும் இன்றைக்கும் ஹலோ ஹலோ

வானம் உள்ளதடி நீலங்கள் பொய்தான்
வாழ்க்கை உள்ளதடி சோகங்கள் பொய்தான்
வானவில்லை பேர்த்து எடு
தூக்கி வந்து பார்ட்டி கொடு ஹோய்.....(ஹலோ)

காலண்டர் மாற்றுங்கள் கை கோர்த்து ஆடுங்கள்
வந்தது வந்தது ஜனவரிதான்
எல்லோரும் கூடுங்கள் என்னோடு பாடுங்கள்
இன்றைக்கு தூக்கத்தின் விடுமுறை நாள்

ஒரு பூ உதிர்ந்தால் கிளை வாடாது
இனி சோகம் வந்தால் அழக்கூடாது
விழி நீர்த்துளியால் துயர் தீராது
தவம் தூங்கிவிட்டால் வரம் மாறாது

அன்பினை போலே ஆயுதம் இல்லை
வன்முறையாலே சாதனை இல்லை
வேண்டும் மட்டும் விட்டுக் கொடு
காந்தி போலே கற்றுக் கொடு....ஹோய்...(ஹலோ)

பட்டங்கள் இங்கேது சட்டங்கள் செல்லாது
பாடடி பாடடி பைங்கிளியே
கட்டுக்குள் நில்லாமல் காற்றுக்கும் சொல்லாமல்
வாங்கடி வாங்கடி இன்மொழியே

இந்த வாழ்க்கையுடன் நீ ஒட்டாமல்
ஒரு தீவைப் போல் நீ வாழாதே
உன் எண்ணம் எல்லாம் நீ சொல்லாமல்
இனி மௌனங்களால் அதை முந்தாதே

தூங்கி விட்டாளே காதலி இன்று
காதலன் எந்தன் காதலை கொன்று
கண்ணீர் உந்தன் நண்பன் இல்லை
காதல் மட்டும் வாழ்க்கை இல்லையே..ஹோய்..(ஹலோ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.