மணி மாடத்து மஞ்சள் நிலா பாடல் வரிகள்

Movie Name
Vidukathai (1997) (விடுகதை)
Music
Deva
Year
1997
Singers
P. Unnikrishnan
Lyrics
Kalidasan

மணி மாடத்து மஞ்சள் நிலா
மலர் கோலத்தில் நின்ற நிலா
அது நான் மட்டும் கண்ட நிலா
அது யாரென்று கேட்காதே......

கலைமான்களின் பள்ளி விழா
அது காட்பரீஸ் தந்த நிலா
இந்த கூட்டத்தில் வந்த நிலா
அட நீ அதைப் பார்க்காதே....

மின்னல் ஒன்றை காதல் கொண்டு
டென்னீஸ் பால் போல் அங்கும் இங்கும்
ஓடி ஓடி அலைந்தேன்
சல்வார் கமீஸ் போட்டாவுக்கு
காஞ்சிபுரம் பட்டுடுத்தி தாலிக் கட்டி ரசித்தேன்

ஹோ....பொம்மையை தூது விட்டேன்....
உன்னிடம் பேச வைத்தேன்
பூவிலே பெயரெழுதி பூஜையில் இடம் பிடித்தேன்
வானவில்லை ஆடைப் பின்ன
நானும் கொண்ட ஆசை வெல்ல
நல்ல நாள் சொல்லடி ஓ...என் ஸ்வீட் ட்ரீம்ஸ்....(மணி)

சிலைக்கொரு பொட்டு வைத்து
வளைந்து வளைந்து முத்தமிட்டு
நானும் சாந்தி அடைந்தேன்
குரலை டேப்பில் ரெக்கார்ட் பண்ணி
அதையே தினமும் லைவ்வாய் எண்ணி
குடும்பம் நடத்தி மகிழ்ந்தேன்

ஹோ....கற்பனை வாழ்க்கை இது
கைக் கூடும் நேரமெது
சிற்பமே விரகம் எனும் சிறை மீள தூது விடு
வாழ்வில் என்ன திட்டமுண்டு
வாழ்வில் நல்ல பெண்ணைக் கொண்டு
இன்னும் நான் சொல்லவா இது என்ன லைப் சார்ட்...(மணி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.