செம்பட்டுப் பூவே வெண் பாடல் வரிகள்

Movie Name
Purusa Latchanam (1993) (புருச லட்சணம்)
Music
Deva
Year
1993
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyrics
Kalidasan
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே

மண்ணிலே ஒரு வெண்ணிலா
கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா
குயில் பாடும் கீதம் சொல்லிலா

செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே

காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ
கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்
புன்னகைதான் பொன்னாகையோ கன்னிகை வா வா வா

செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே
ஸ்ரீரங்கக் காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே

பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே
புதுவித போதை துள்ளியதே
காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே

என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்
இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்
என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா

செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்
ஸ்ரீரங்கனாதருக்கே...ஹோய்
பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்
என்னுயிர் ராமனுக்கே... ஹோய்

மண்ணிலே வந்த வெண்ணிலா
இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா
குயில் கீதம் காதல் சொல்லிலா

ஆண் : ஆ.. ஆ.. ஆ...செம்பட்டுப்பூவே
வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.