Song lyrics

Kakkai Siraginile Nandalala Lyrics

காக்கை சிறகினிலே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Deva
Year
1993
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyricist
Kalidasan
Kakkai Siraginile Nandalala

Lyrics

Kakkai Siraginile Nandalala Lyrics

பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நீ வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா

ஆண் : ஆஆ பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்
தேனூறும் முத்தம் தெளிச்சு..ஆஆங்....
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு

பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நீ வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா

ஆண் : தூங்கி கிடந்த உள்ளம்
தோகை விரித்துக் கொண்டு
ஏங்கி தவிப்பது இன்று யாராலே
பெண் : தாங்கி பிடிக்கும் எண்ணம்
தாளம் அடிக்கும் வண்ணம்
ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே

ஆண் : அழகான மங்கை ஒரு அதிகாலை கங்கை
அடி உனக்கே என் இன்பம் மொத்தமே
பெண் : காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்

ஆண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நான் வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா

பெண் : ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையே
மூக்கு சிவப்பதென்ன வீணாக
ஆண் : காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி
நீந்தி பிடிக்க வந்தேன் நானாக

பெண் : உயிரோடு தஞ்சம் என்
உடல் போடும் மஞ்சும்
நீ தினந்தோறும் முத்து குளிக்க
ஆண் : தாராளம் தாராளம்
தாகம் மனதினில் ஏராளம்

ஆண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா நான் வந்ததாலா
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன
நந்தலாலா முத்தம் தந்ததாலா

பெண் : பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்
தேனூறும் முத்தம் தெளிச்சு.....
நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு
காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு
ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு

ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா
பெண் : நீ வந்ததாலா....
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா
ஆண் : ம்ம்ம்ஹூம்...ஹூம்..ஹூம்...

People

Related People

6 people