நீயா நீயா நீயேதானா பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Ilaignan (2011) (இளைஞன்)
Music
Vidyasagar
Year
2011
Singers
Tippu
Lyrics
நீயா நீயா நீயேதானா 
தீயா தீயா தீயேதானா 
நீயா நீயா நீயேதானா 
சுற்றும் சுடரும் நீதானா 

நீயா நீயா நீயேதானா 
தீயா தீயா தீயேதானா 
நீயா நீயா நீயேதானா 
சுற்றும் சுடரும் நீதானா 

விடியும் விடியும் என்றென்னு முடியும் முடியும் 
நெஞ்சம் நிமிரும் நிமிரும் இளைஞன் நீயேதானா 
அடிமை அடிமை வர்க்கம் உரிமை உரிமை கேட்கும் 
உதவும் உதவும் இளைஞன் நீயேதானா 

நீயா நீயா நீயேதானா 
தீயா தீயா தீயேதானா 
நீயா நீயா நீயேதானா 
சுற்றும் சுடரும் நீதானா 

எத்தனைக்காலம் எத்தனைப்பொழுது 
ஊமைகளாகி உழல்வதோ 
உழைப்பவன் கண்ணீர் உறிஞ்சிடும் உலகம் 
சுகமாய் இங்கு சுழல்வதோ 
ஏழைகள் நெஞ்சின் எலும்புகள் மீது 
அவைக்கூட்டும் வாழ்வதோ 
பாறையில் செல்லும் கரும்பு கைப்போல 
உழைப்பவன் மூச்சுப்போவதோ 
இருப்பாய் நீ நெறுப்பாய் 
ஏன் பொறுப்பாய் தடையறுப்பாய் 
இருப்பாய் நீ நெறுப்பாய் 
ஏன் பொறுப்பாய் தடையறுப்பாய் 
நம்பிக்கைத் தோன்றட்டும் 
நண்பர்கள் சேரட்டும் நாளைகள் விடியட்டும் வா... 

நீயா நீயா நீயேதானா 
தீயா தீயா தீயேதானா 
நீயா நீயா நீயேதானா 
சுற்றும் சுடரும் நீதானா 

யுத்தம் வருது யுத்தம் வருது ஆயுதம் கையில் தருது 
தேகம் எழுது வேட்கை எழுது 
போர்க்களம் போகும்பொழுது 
இன்னும் இறுகு தீயைப்பருகு 
ரௌத்திரம் நெஞ்சில் பழகு 
அச்சம் விலகு விடியும் பிறகு 
காயமே வாழ்வின் அழகு 
எதிர்ப்பாய் அதை எதிர்ப்பாய் 
வாளை எடுப்பாய் அதில் கொடுப்பாய் 
எதிர்ப்பாய் அதை எதிர்ப்பாய் 
வாளை எடுப்பாய் அதில் கொடுப்பாய் 
உயரட்டும் சிறகெல்லாம் பரவட்டும் பரவட்டும் தீ....