ஒரு நிலா ஒரு குளம் பாடல் வரிகள்

Movie Name
Ilaignan (2011) (இளைஞன்)
Music
Vidyasagar
Year
2011
Singers
Karthik, Shreya Ghoshal
Lyrics
நெடும்பகல் நீண்ட கனவு நிஜமாகுமா... 

ஒரு நிலா ஒரு குளம் 
ஒரு மழை ஒரு குடை 
நீ நான் போகும் ஒரு விழா 

ஒரு மனம் ஒரு சுகம் 
ஒரு இமை ஒரு கனா 
நீதான் போதும் ஒரு யுகம் 

ஒரு கழல் பெ. திரையிதை 
ஒரு நிழல் பெ. இரு படம் 
நீ நான் போகும் பெ. ஒரு தவம் 

ஒரு நிலா... ஒரு குளம் 

ஒரு இமை ஒரு கனா 

ஹா... நீ நான் போகும் பெ. ஒரு தவம் 

காற்றில் ஒட்டிய முன்பனி நீ! 
பனியை ஒற்றிய ஒளி விரல் நான் 

மேகம் மின்னிய மின்னல் நீ! 
மின்னல் தூறிய தாழை நான் 

சந்தம் கொஞ்சிய செய்யுள் நீ! 
செய்யுள் சிந்திய சந்தம் நான் 

வெட்கம் கவ்விய வெப்பம் நான் 

ஓ... நீ நான் கூடும் முதல் தனிமை 

ஒரு நிலா ஒரு குளம் 
ஒரு மழை ஒரு குடை 
நீ நான் போகும் ஒரு விழா 

மஞ்சள் கொஞ்சிய மன்மதம் நீ! 
கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான் 

மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ! 
மௌனம் மலர்கிற கவிதை நான் 

ஓவியம் எழுதும் அழகியல் நீ! 
உன்னை வரைகிற தூரிகை நான் 

விரல் நீட்டிய வீழ்விசை நீ! 
உன்னில் பூட்டிய இதழிசை நான் 

ஹா.. நீ நான் கோதும் புது உலகம் 

ஒரு நிலா ஒரு குளம் 
ஒரு மழை ஒரு குடை 
நீ நான் போகும் ஒரு விழா 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.