டாடி டாடி சாரி பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Mappillai Sir (1988) (மாப்பிளை சார்)
Music
Shankar-Ganesh
Year
1988
Singers
K. S. Chitra, Suja Radhakrishnan
Lyrics
Idhaya Chandran
டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி
டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி
காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்

காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்
டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

பொண்ணுங்க தானே நாங்க கோபிக்கலாமா நீங்க
உங்களைப் போல டாடி இல்ல வாங்க
சிறுசுகள் தானே நாங்க மன்னிக்கலாமே நீங்க
உங்க கோபத்தாலே மம்மி வாடுறாங்க

பட்டினியாக நீங்க இருந்தா மம்மிக்கு தாங்காது
மம்மிக்கு ஏதும் ஆபத்து வந்தா டாடியும் தூங்காது
சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு

டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி
காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்
டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

சக்கரக்கட்டி நீங்க ஒத்துக்கிறோமே நாங்க
உங்க கத பூரா மம்மி இப்போ சொன்னாங்க
சந்தனக்கட்ட நீங்க மம்மியின் காதலுக்காக
டிகிரியைக் கூட தூக்கி எறிஞ்ஜீங்க

சிரிக்கிற மூஞ்சி கோபப்பட்டா சிரிப்பா இருக்காதா
சீரியஸ்ஸா இத எடுத்தீங்கன்னா வியப்பா இருக்காதா
சரி மன்னிப்பு மன்னிப்பு வாங்க டாடி லஞ்சுக்கு

டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி
காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்
டாடி டாடி சாரி டாடி சாப்பிடத்தான் வாங்க டாடி

மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர்
வீராப்புத்தான் போதும் மிஸ்டர்
இப்போ நீங்க கோபப்பட்டா
எப்பவுமே பட்டினிதான்
மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர்
வீராப்புத்தான் போதும் மிஸ்டர்.....