பொண்டாட்டி ஒரு பாதி பாடல் வரிகள்

Movie Name
Varavu Nalla Uravu (1990) (வரவு நல்ல உறவு)
Music
Shankar-Ganesh
Year
1990
Singers
Malaysia Vasudevan
Lyrics
Idhaya Chandran

பொண்டாட்டி ஒரு பாதி புள்ளைங்க மறு பாதி
சந்தோஷம் தடுமாறுதே
சம்சாரம் பெருசாகி சொந்தங்கள் வரும்போது
தன்மானம் பறி போகுதே சன்யாசம் உருவாகுதே

பாலூட்டி வளர்த்தாலும் சீராட்டி பார்த்தாலும்
புள்ளைங்க பாம்புதான் சாமி
கொத்தாம போகுமா ஏமி
(ஏழு குண்டல வாடா மீரே செப்பண்டி)

துட்டோட எல்லாம் போயாச்சு
துண்டோட நானும் நின்னாச்சு
அடியோட அடிச்சிட்டான் மொட்டை
அங்கங்கே தெரியுதே சொட்டை...(பொண்டாட்டி)

பூ வாங்கி குடுத்தாலும்
அல்வாவா குவிச்சாலும்
அம்மாக்கள் புள்ளப் பக்கம்தான்
அப்பாக்கள் ரோட்டுப் பக்கம்தான்

பொண்டாட்டியால நான்தானே
திண்டாடி தேவதாசானேன்
கெட்டதும் புத்தி வந்தாச்சு
இப்போ நான் புத்தன் ஆயாச்சு

புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி......
சங்கர சங்கர சம்போ
காமாட்சி போயாச்சு இப்போ நான் அம்போ
சங்கர சங்கர சம்போ....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.