இரண்டு காதல் பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Kaathu Vaakula Rendu Kadhal (2021) (காத்துவாக்குல ரெண்டு காதல்)
Music
Anirudh Ravichander
Year
2021
Singers
Anirudh Ravichander, Shakthisree Gopalan
Lyrics
Vignesh Shivan
காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல் ரெண்டாகி துண்டானது
கால்கள் தடுமாறி தடமாறி போனதே
காற்றில் என் காதல்கள் போகுதே
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் வலி எனக்கில்லை

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே

இவன் பிரிய போகிறான்
என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை
இது உடைய கூடிடும்
என்று ஒருமுறை உரைக்கவில்லையே

இவன் பொய்கள் பேசுவான்
என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை
இது முடிந்து போய்விடும்
என்று ஒருமுறை தோணவில்லையே

அர்த்தங்கள் தேடி போகாதே
அழகு அழிந்து போகும்
அன்பே நீ விட்டு போகாதே
உயிரும் உறைந்து போகும்

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே

அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்

அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்

வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா
இது போதும் நீ போதும்
இனி சொல்லிக்க வேணாம்மடா
வருத்தம் கூடாதடா…..

காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல்….

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.