Song lyrics

Kannamma Kanavillaiya Lyrics

கண்ணம்மா கனவில்லையா பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
2004
Singers
S. P. Balasubramaniam
Kannamma Kanavillaiya

Lyrics

Kannamma Kanavillaiya Lyrics

கண்ணம்மா... கனவில்லையா...
கண் தனில் சுகம் இல்லையா
என்னம்மா பொழுதில்லையா
மனம் தனில் எந்தன் தொல்லையா...

சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா
சொல்லம்மா வாசல் வர வழி இல்லையா
வாழ்வினில் வசந்தம் தர மொழி இல்லையா.(கண்ணம்மா)

உன் குரல் கேட்கலையா
இல்லை குயில் கூடக் கூவலையா ஆ...
உன் முகம் பார்க்கலையா
இல்லை ஜாதிப் பூ பூக்கலையா ஆ...

உன் பாதம் பதியலையா
இல்லை மண்ணில் யாரும் வரையலையா
உன் பாசம் போதலையா
இல்லை புவி கூட சுற்றலையா

எதுவுமே புரியலையா
இல்லை என்னைத்தான் புரியலையா
என்னிடம் தெரியலையா
இல்லை என்னிடம் நான் தெரியலையா
என்னிடம் நான் தெரியலையா...(கண்ணம்மா)

உன்னுள்ளில் நான் இனிக்கலையா
இல்லை இனிப்பிலும் ருசிக்கலையா ஆ...
உன் கண்ணில் நான் சிரிக்கலையா
இல்லை உயிரிலே கலக்கலையா ஆ...

உன் கனவில் நான் காணலையா
இல்லை நினைவிலும் நான் இல்லையா
உன் மனதில் நான் துணை இல்லையா
இல்லை துணை தேடத் துணிவில்லையா

எதுவுமே புரியலையா
இல்லை என்னைத்தான் புரியலையா
என்னிடம் தெரியலையா
இல்லை என்னிடம் நான் தெரியலையா
என்னிடம் நான் தெரியலையா....(கண்ணம்மா)

People

Related People

3 people