கண்ணிப்பெண்கள் பாடல் வரிகள்

Movie Name
Kaadhal Mannan (1998) (காதல் மன்னன்)
Music
Bharathwaj
Year
1998
Singers
Febi, Ada Ali Azad
Lyrics
கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள்  கையெழுத்து போட்டவன்
பத்து பேர்கள் மத்தியில்  பளிச்சென்று உள்ளவன்
அழுக்கு சட்டை போட்டாலும்  அழகாய் தோன்றும் ஆணழகன்
பெண்கள் பின்னால் சுற்றாமல்  பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ
கண்ணே இல்லா கண்னியரும் கடிதம் எழுத செய்கிறவன்
காதல் மறுத்த பெண் மனத்தில் கல்லை எறிந்து போகிறவன் எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன்

சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு
உறவாடும் கனவை கண்டு உச்சு கொட்டும் உதடு
ரதி தேவி பேத்தி போல மதனை தேடும் மனசு
எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு
சின்ன கண்கள் இடையே சிக்கி கொண்ட போதும்
அலைகள் முட்டும் பாறை போலே அசையாதுள்ள வீரன் எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்

முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை
முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி
அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி
இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன்
யாரோ அவன் பேரை கேளுங்கள்
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்

மதம் என்ன ஜாதி என்ன  மறந்து போனோம் நாங்கள்
பல ஊரு பறவைக்கெல்லாம்  இதுதான் வேடந்த்தாங்கள்
உணவொடு பசியை கூட  பகிர்ந்து கொள்வோம் நாங்கள்
கிழமை தேதி பார்ப்பதும் இல்லை  நகரும் எங்கள் நாட்கள்
எதுவும் இல்லை கையில் எல்லாம் உள்ளது நெஞ்சில்
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன் காதல் மன்னன்
கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன்
ஹே ஹே ஹே அவனே காதல் மன்னன்
காதல் மன்னன் காதல் மன்னன் காதல் மன்னன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.