ஒரு மாலை இளவெயில் பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Ghajini (2005) (கஜினி)
Music
Harris Jayaraj
Year
2005
Singers
Karthik
Lyrics
Thamarai
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்

கூச்சம் கொண்ட தென்றலா..
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

பேசும் அழகினை
கேட்டு ரசித்திட..
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை
பார்த்து ரசித்திட..
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே

பனியில் சென்றால் உன் முகம்..
என் மேலே நீராய் இறங்கும்..
ஓ தலை சாய்த்து பார்த்தேனே
தடுமாறி போனேனெ

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளி விட்ட பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.