மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது பாடல் வரிகள்

Movie Name
Thalaivanukkor Thalaivi (1989) (தலைவனுக்கோர் தலைவி)
Music
Dr. Balamurali Krishna
Year
1989
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics
Naa. Kamarasan
ஆண் : மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது
மாங்கிளை மேலொரு பூங்கொடி
சாய்ந்தது எங்கும் பூவாசம்
மன்னவன் மேலொரு பொன் மயில்
சாய்ந்தது நெஞ்சில் உல்லாசம்

இது அதுதான் இன்பக் கதைதான்
இது அதுதான் இன்பக் கதைதான்
மாங்கிளை மேலொரு பூங்கொடி
சாய்ந்தது எங்கும் பூவாசம்

பெண் : ஆசைகளால் ஒரு நாடகம்
ஆனந்த மேடை காவியம்
தேவதை போலொரு ஊர்வலம்
தேவதை போலொரு ஊர்வலம்
திருநாள் இது திருநாள் திருநாள் இது திருநாள்

ஆண் : மலைகளை மூடி மறைத்திட முயன்று
தோற்கும் அருவி நீரோட்டம்
மலைகளை மூடி மறைத்திட முயன்று
தோற்கும் அருவி நீரோட்டம்

இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள்
மேலும் மேலும் அழகூட்டும்
இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள்
மேலும் மேலும் அழகூட்டும்

பெண் : பாடும் கிளியின் சிறகுகள் போலே
பச்சை வண்ண பட்டாடை
பாடும் கிளியின் சிறகுகள் போலே
பச்சை வண்ண பட்டாடை

பருவ ராணிக்கு சாமரம் வீசிட
காற்றில் பறக்குது மேலாடை
காற்றில் பறக்குது மேலாடை

ஆண் : சங்கு கழுத்தில் முத்து மாலைகள்
ஆடும் நடனம் போதாதோ
தங்கக் கழுத்தை எனது கைகள்
தங்கக் கழுத்தை எனது கைகள்
தழுவிக் கொண்டால் ஆகாதோ
ஆஹாஹ் லாலாலா ஹேஹ் ஆஆஹாஹ்....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.